நாட்டின் தலைவராகும் சிந்தையில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விமல்!
president
sri lanka
government
wimal weerawansa
By Kalaimathy
நாட்டின் அடுத்த அரச தலைவராக பதவிக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் விமல் வீரவன்ச, அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
தேனீர் கோப்பையில் முதலைகளை காட்டியதால், வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் பறிபோயின.
அரசாங்கத்தை விமர்சித்து, வீரவன்ச மற்றும் கம்மன்பில உள்ளிட்டோர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. அரச தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவர்களை பதவிகளில் இருந்து நீக்கினார்.
இந்த முன்னாள் அமைச்சர்கள் அரச தலைவருக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள், சுமத்தும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி