வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள்!
வெளிநாட்டில் வேலைக்காகச் செல்ல முயற்சிக்கும் அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய படிவத்தில் பக்கங்களைக் குறைத்துள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பப் படிவத்தின் பக்கங்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து இரண்டு பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கையின் மூலம் விண்ணப்பப் படிவத்தை அச்சிடுவதற்கான செலவு 50 சதவீதம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
புதிய இரண்டு பக்க படிவம்
அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் வெளிநாட்டில் வேலைக்காக விடுமுறை கோரி வருவதால், விண்ணப்பப் படிவங்களை அச்சிடுவதற்கான செலவு அதிகமாக உள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த புதிய இரண்டு பக்க படிவம் ஏற்கனவே அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

