அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் நிதியமைச்சு தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Sri Lanka Economic Crisis
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Finance Sri Lanka
By S P Thas
இதுவரையில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனாலும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக சுகாதார அமைச்சில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்திருந்தார்.
இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி