கோட்டாபயவுக்கு மனரீதியான அழுத்தங்களைக்கொடுத்த ஜூலி சங் - அம்பலப்படுத்திய விமல்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபகச, வாரத்துக்கு மூன்று தடவைகள் அமெரிக்க தூதுவரை சந்தித்து வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மனோ ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வந்ததாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தினார்.
ஆகவே இலங்கையில் இன்று மன ரீதியான அழுத்தம் கொடுத்து விடயம் சாதிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் தகுந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
குறைபாடுகள் இருந்தாலும் நாட்டில் தற்போது சட்டபூர்வமான அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த திட்டங்களையும் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது திட்டங்களை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்றும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமன்றி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக தலையிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
