மக்களின் உயிர்காப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!
இலங்கை வைத்தியசாலைகளில் தற்போது உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அத்துடன் அவ்வாறான மருந்துகளை வெளியிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடி நிலை பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில், உயிர்காக்கும் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக மல்லாவி வைத்தியசாலையின் நலன்புரி சங்கத்தினர் பொதுமக்களிடம் உதவிகோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதாவது, இவ்வாறான உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் தற்போது தனியார் மருத்துவ களஞ்சியங்களிலே இருக்கின்ற போதும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்குவதற்கு பொருளாதார நெருக்கடி நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான மருந்துப்பொருட்கள் மட்டுமன்றி மேலும் சில அத்தியவசிய பொருட்களும் தேவைப்படுவதால் அவற்றை பெற்றுக்கொள்வதற்குரிய உதவிகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகவே மக்களின் உயிர்களைக்காக்கும் உதவியினை புரியுமாறு வைத்தியசாலையின் நலன்புரி சங்க தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில்,
உயிர்காக்கும் அவசியமான மருந்துகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு 2 மில்லியன் நிதியுதவியும்,
மருந்துகளை குளிர்மைப்படுத்தி வைப்பதற்கான குளிர்சாதனப்பெட்டி 3
மற்றும் யூஎஸ்எஸ் இயந்திரம் 1 அவசியம் தேவைப்படுவதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு உதவி வழங்குவதற்கான வங்கி கணக்கு இலக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.




