ஐ.எம்.எவ் கடன் தாமதம் - தவறை ஒப்புக்கொண்ட இலங்கை அரசாங்கம்

Shehan Semasinghe Sri Lanka Economic Crisis IMF Sri Lanka Economy of Sri Lanka
By Vanan Dec 29, 2022 02:39 PM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் கடன் பெறுவதற்கான உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கடன் பெறுவதற்கான அனுமதி கிடைத்தவுடன் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் வழங்குனர்களின் நம்பிக்கை

ஐ.எம்.எவ் கடன் தாமதம் - தவறை ஒப்புக்கொண்ட இலங்கை அரசாங்கம் | Sri Lanka Imf Deal Staff Level Agreement

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையுடனான பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விட, இலங்கை மீண்டுமொருமுறை ஏனைய கடன் வழங்குனர்களின் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் முக்கியமானது.

நிதி உதவிக்கான நிறைவேற்று சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த டிசம்பர் காலக்கெடுவிற்குள் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தவறியிருந்தது.

கடன் பெறுவதற்கு தேவையான செயன்முறை

ஐ.எம்.எவ் கடன் தாமதம் - தவறை ஒப்புக்கொண்ட இலங்கை அரசாங்கம் | Sri Lanka Imf Deal Staff Level Agreement

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கடனை பெறுவதற்கு தேவையான செயன்முறைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்துவருகின்றது.

இதனிடையே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தாமதமடைவதற்கு சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சு இழுத்தடிப்பு மாத்திரம் காரணம் அல்லவென பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய அதிகாரியொருவர் கூறியிருந்தார்.

இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாகப் பலர் கூறியுள்ள போதிலும், எந்தவொரு இருதரப்பு கடன் வழங்குநர்களும் இதுவரை முறைப்படியோ அல்லது எழுத்துபூர்வமாகவோ கடன் மறுசீரமைப்பு குறித்து எந்த உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை” - என்றார்.  

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்