சிறிலங்கா - சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை - வெளியானது விசேட அறிக்கை!
இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சியடைவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா விசேட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் எனவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த வியாழனன்று சிறிலங்காவுடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.
உடன்படிக்கையை எட்டிய ஐஎம்எஃப் மற்றும் சிறிலங்கா
அதன் போது சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும், 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை 48 மாத விரிவாக்க நிதி வசதிக்கான உடன்படிக்கையை எட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Very pleased that IMF staff and Sri Lankan government officials have reached a staff-level agreement to support the country’s economic policies with a 48-month Extended Fund Facility of about US$2.9 billion. This is an important step forward for Sri Lanka. https://t.co/bKikg3KDZa pic.twitter.com/Y9PBNI884I
— Kristalina Georgieva (@KGeorgieva) September 4, 2022