சர்வதேச நாணய நிதியம் மற்றும் சிறிலங்கா தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள விடயம்!
சர்வதேச நாணய நிதியத்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை சிறிலங்காவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வரவேற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு
சிறிலங்காவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் செப்டம்பர் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பில், எதிர்காலத்தில் சிறிலங்கா, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை விரிவான நிதியுதவி வசதிகளின் கீழ் பெறும் என தெரிவிக்கப்பட்டது.
@EU_in_Sri_Lanka welcomes staff level agreement between #imf and #SriLanka and looks forward to continue cooperation on public finance management and green economy, including export industries.
— EU in Sri Lanka (@EU_in_Sri_Lanka) September 2, 2022
மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.