இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அத்துடன் இதுவரையில் வாகன இறக்குமதிக்காக 450 மில்லியன் டொலருக்கான கடனுறுதிக் கடிதம் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
1 பில்லியன் அமெரிக்க டொலர்
இதுவரை திறக்கப்பட்ட கடனுறுதிக் கடிதங்களின் மொத்த மதிப்பு, வாகன இறக்குமதி நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிப்பதாகவும், இது அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடரும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் வரை ஒதுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
