இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
Sri Lanka Tourism
India
Russia
By Jaso
இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
முதலிடத்தில் இந்தியா
இந்த மாதம் 50 ஆயிரத்து 395 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

12,261 இந்திய சுற்றுலாப்பயணிகளும், 4,554 ரஷ்ய சுற்றுலாப்பயணிகளும், 3,269 சீன சுற்றுலாப்பயணிகளும், 3,180 ஜேர்மன் சுற்றுலாப்பயணிகளும் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.