கிளிநொச்சிக்கு அனுப்பப்படவுள்ள தமிழ்நாட்டு நிவாரணப் பொதி!
தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொதிகளில் ஒரு பகுதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் 40 மில்லியன் பெறுமதியான உணவுப் பொட்டலங்கள் அடங்கியுள்ளதுடன், கிளிநொச்சி மக்களின் பொருளாதார வறுமை குறித்து அரசாங்கம் முன்னரே உணர்ந்துகொண்டதன் விளைவாக 20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் பொருத்தமான குடும்பங்களைத் தெரிவு செய்வதற்காக கிராம மட்டத்தில் முன்மொழிபவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தார்.