எழில் கொஞ்சும் சுற்றுலாதளம் -போர்ப்ஸ் சஞ்சிகையில் இடம்பிடித்த இலங்கை
Sri Lanka Tourism
Tourism
By Sumithiran
ஃபோர்ப்ஸ் சஞ்சிகையானது, இவ்வருடம் உலகிற்குச் செல்வதற்கு சிறந்த 23 நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளது.
சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த 23 நாடுகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
சுற்றுலா தலம்
அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம், கண்டி, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்கள் எனவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி