சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மக்களை ஏமாற்றும் அதிகாரிகள் - பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்!
கச்சேரி பகுதியில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் இடம் பிடிப்பதற்காக தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியிலுள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக காத்திருந்து வாகனங்கள் எரிபொருளைப் பெற்றுச் செல்லும் நிலையில், சிலர் வாகனங்களுக்கான வரிசையை பிடித்துக்கொண்டு அதற்கான தரகுப் பணத்தை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு லங்கா ஐஓசி எரிபாருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருனைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த யாழ்ப்பாணம் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை ஆனால், வாகனங்களுக்கான வரிசை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார்.
மேலும் கடந்த இரண்டு நாட்களாக அவர் எரிபொருளுக்காக காத்திருக்கும் நிலையில் தனக்கு முன்பாக 05 கார்கள் நிறுத்தக்கூடிய இடத்தில் கயிறு கட்டப்பட்டு, கார்களின் இலக்கங்கள் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் வரிசையில் வாகனமின்றி இடம் ஒதுக்கல்
குறித்த பிரதேசத்தை அவ்விடத்திலுள்ள வீட்டின் உரிமையாளர் கயிறு கட்டி, கார் உரிமையாளர்களிடம் பணம் பெற்று்கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
இன்று பெற்றோல் விநியோகம் இடம்பெறும் நிலையில், வரிசையில் இடம்பிடித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு வந்த கார்களின் உரிமையாளர்களில் ஒருவரிடம், “நீங்கள் பெற்றோல் அடித்துவிட்டு செல்லும் போது எனக்கும் அரை லீட்டர் பெற்றோல் தந்துவிட்ட செல்லுங்கள்” என வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரியான முறையில் பதிலளிக்காத அதிகாரிகள்
இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்திற்கு சென்று வினவிய போதிலும் அதற்கு சரியான பதில் வழங்கப்படவில்லை எனவும், இதற்கு இலஞ்சம் பெறப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதற்கு..















