புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்- யாழில் முற்றுகையிடப்பட்ட பிரதேசம்!
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியில் சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் மானிப்பாய் காவல் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆனைக்கோட்டை மற்றும் நவாலி பகுதியில் சட்ட விரோத மதுபானமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களின் உடமையிலிருந்து 70 லீற்றர் கசிப்பு, உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 185000 மி.லீற்றர் கோடா மற்றும் உபகரணங்கள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மானிப்பாய் காவல்துறையினரால் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



