ரணில் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம் : ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தலை வென்றெடுப்போம் - யாழில் பாரிய போராட்டம்
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினை எதிர்த்து தேசிய மக்கள் சக்தியினர் இன்று யாழ்ப்பாணம் பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மின்சாரம், நீர், எறிவாயு கொள்கலன் (காஸ்) மற்றும் உணவு பொருட்களின் விலை அதிகரித்து மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டி அடிப்போம். எனும் தொனிப் பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தேர்தலை பிற்போடும் ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிப்போம்., சீனி மோசடி, இறக்குமதி மோசடியினை மேற்கொண்ட ரணிலே வெளியேறு, மின் கட்டணம் அதிகரிப்பால் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தலை வென்றெடுப்போம் போன்ற பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இராமலிங்கம் சந்திரசேகரன்
குறித்த போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
