ஆரம்பமாகின கட்சித் தாவல்கள் - பலமாகும் சஜித் அணி!
தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
இருவரும் எதிர்வரும் தேர்தலில் தங்காலை மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் வழங்கினர். இதனைத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் வெதஆராச்சியின் தலைமையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல
இதில் மாநகர சபையின் தலைவர், மாநகர சபை உறுப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது, தங்காலை மாநகர சபையின் தலைவரும், அரலிய எரந்திமவும் மக்கள் இயக்கத்தில் இணைந்தது தனக்கு கிடைத்த வெற்றி என திலீப் வெதஆரச்சி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்காலை நகரம் ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல அது எமக்கு சொந்தமானது என திலீப் வேதஆரச்சி தெரிவித்துள்ளார்.
மக்கள் சேவைக்கு இடம் இல்லை
இதேவேளை இரண்டு ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன அணியினரும் தங்காலை நகர மக்களுக்கு சேவையாற்ற இடமளிக்கமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த பெரமுன ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதனால் தான், அந்த வேலையைச் செய்யக்கூடிய ஒரு குழுவில் சேர முடிவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

