மாலைதீவில் தஞ்சமடைய பல மில்லியன்களை செலவிட்ட கோட்டாபய! வெளிச்சத்திற்கு வந்த தகவல்கள்
மாலைதீவு அதிபர் கோட்டாபயவிடம் இருந்து பல மில்லியன்களை இலஞ்சமாகப்பெற்றுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாலைதீவு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு நேற்று அதிகாலை சென்றிருந்தார்.
இந்நிலையில் அவரை இலங்கையில் இருந்து பாதுகாப்பாக மாலைதீவிற்கு அழைத்துச் செல்வதற்கு, அந்நாட்டு அதிபர் 5 மில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றாரா என மாலைதீவு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்கள்
அதேவேளை, கோட்டாபய மாலைதீவிற்கு சென்ற போது, மாலைதீவு அதிபர் ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சவூதி அரேபியா சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து நேற்று இரவு சவூதி அரேபியாவில் இருந்து மாலைதீவை சென்றடைந்தார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
அவ்வாறு அவர் நாட்டை சென்றடைந்ததும், மாலைதீவு ஊடகவியலாளர்கள் கோட்டாபயவிடமிருந்து இலஞ்சம் பெறப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் மாலைதீவு அதிபர் வழங்கிய பதில் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தார்.
எனினும் அவரால் செல்ல முடியவில்லை என மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் மாலைதீவு அதிபரும் சிங்கப்பூர் செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
