பட்டப்பகலில் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை- தீவிர விசாரணையில் காவல்துறையினர்!
Sri Lanka Police
Mannar
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kalaimathy
மன்னார் இலங்கை வங்கிக்கு அருகாமையில் பெண் ஒருவரின் சங்கிலி இனம் தெரியாத நபரால் அறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம் பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உப்புக்குளம் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து நகை சங்கிலியை கொள்ளையடித்த சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட பெண் மன்னார் பொலிஸ்காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக மன்னார் நகர்ப் பகுதிகளில் வீடுகள் உடைக்கப்படும் சம்பவங்களும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி