மிக வேகமாக இடம்பெற்ற கட்டுமானம் - சரிந்தது காற்றாலை; மறைக்கப்பட்டதா மறக்கப்பட்டதா!
மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டு வந்த கோபுரங்களில் ஒன்று கடந்த மாதம் உடைந்து விழுந்துள்ளது.
அப்பகுதியில் கால்நடைகள் விவசாயிகள் மாத்திரம் சென்று வரும் பகுதி என்பதால் சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்துள்ளது.
வாகனம் சேதம்
எனினும் அப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டிருக்கும் விவசாய நடவடிக்கைகளை பார்வையிடச் சென்ற போது கோபுரம் சரிந்து கிடப்பதையும் கனரக பளு தூக்கும் கிரேன் வாகனம் சேதமாகி இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மீள் ஆரம்பம்
குறித்த கோபுரம் சரிந்து கிரேன் மீது விழுந்த போதும் கிரேன் இயக்குனர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக அறிய முடிகிறது. இந்த சம்பவம் நடை பெற்றதில் இருந்து அப்பகுதியில் காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் இம்மாத இறுதியில் மீண்டும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது.
நானாட்டான் பிரதேசத்தில் நறுவிலிக்குளம் முதல் அச்சங்குளம் வரை 6 மின் கோபுரங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/94e45189-8440-4127-9921-a78937160ecd/23-63da6a1708de1.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1e7553fe-123e-409c-a1f9-75495bb3d5fc/23-63da6a1743b27.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/477230fd-d56a-4b7c-8e33-436905e41b8f/23-63da6a1791156.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/80212c24-a0a7-4b0b-a321-723186d70215/23-63da6a17d1d1d.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/470be261-3544-4ebe-923f-4b4d090a4a42/23-63da6a181e881.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/06e2b964-743b-4d6d-94bd-0ed2e28c0fbd/23-63da6a185d921.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/09f97fce-5fce-4381-b813-109aacdd8e10/23-63da6a189f316.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)