தென்னிலங்கையில் கோர விபத்து - குடும்பஸ்தர் ஒருவர் பலி(படங்கள்)
Matara
Accident
Death
By Dharu
கம்புருகமுவ பொரொல்ல வீதியில் உள்ள தொடருந்து கடவையில் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த விரைவு தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை தலைமையக காவல்நிலைய பொறுப்பதிகாரி ரொஷான் ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் புபுது பிரியங்க (41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தை
தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட போது அவர் ஓட்டிச் சென்ற மகிழுந்து புகையிரதத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி