மகிந்தவின் இரட்டை முகம்..! தெற்கிற்கு ஒன்று வடக்கிற்கு வேறொன்று - வெளிவரும் பின்னணிகள்
தெற்கில் காணாமல் போனோர் தொடர்பில் முதலில் குரல் கொடுத்தது மகிந்த ராஜபக்சவே எனவும் இவர் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் என்ன செய்திருக்கின்றார் எனவும் தமிழன் மனித உரிமைகள் மையத்தின் உறுப்பினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கிருபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தெற்கில் காணாமல் போனோர் தொடர்பில் குரல் கொடுத்த மகிந்த ராஜபக்சவும், வாசுதேவ நாணயக்காரவும் வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்குடன் இணைந்து வேலை செய்ய தாயார் நிலையில் இல்லை
அரசியல் தீர்வோ அல்லது காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையோ எதுவாகினும் வடக்கு கிழக்குடன் இணைந்து வேலை செய்ய அவர்கள் தாயார் நிலையில் இல்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், காணாமல் போனோர் தொடர்பில் தற்பொழுது சந்திரிக்கா அதிகமாக கதைத்து வருவதாகவும் ஆனால் யாழ் செம்மணியில் புதைக்கப்படவர்கள் யாருடைய காலத்தில் காணமல் போனார்கள் என்றும் இதற்காக சந்திரிக்கா குரல் கொடுக்க வருவாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோல் சீனக்கப்பலின் வருகையும் கோட்டாபய ராஜபக்சவின் மீள் இலங்கை வருகையும் சர்வதேசத்தை விழிப்படைய வைத்தமையால் இம்முறை வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
முக்கியமாக சீனக்கப்பலின் வருகையால் இந்தியாவின் தீர்மானத்தில் மாற்றம் வரும் என தான் நம்புவதாக குறிப்பிட்டு சென்ற முறை இந்தியா நடுநிலை வகித்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.
கிருபாகரன் கலந்து கொண்ட செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி காணொளி
பகுதி - 1
பகுதி - 2