எல்லைமீறும் காவல்துறையின் அராஜகம் - மீண்டும் தாக்குவோம் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எச்சரிக்கை!
சிறிலங்கா காவல்துறை தொடர்ந்தும் எம்மைத் தாக்குவது போல் நடந்து கொள்வதனால் எமது நீதிக்கான போராட்டம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
“இனிவரும் காலங்களில் காவல்துறை எம்மைத் தாக்கினால் நாமும் திருப்பித் தாக்குவோம்.
திரும்பத் தாக்குவோம்
தொடர்ச்சியாக எம்மை தாக்கினால் ஒரு கட்டத்தில் நாங்கள் பொறுமை இழந்து திரும்ப தாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
மேலும், அண்மையில் வவுனியாவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க சென்றிருந்த போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாடாளுமன்றின் கவனத்திற்கு செல்லாத அராஜகம்
அப்போது அங்கு குவிந்திருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது அராஜகமான முறையில் நடந்து கொண்டனர்.
இருப்பினும், காவல்துறையினர் எம்மைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றின் கவனத்திற்கு இதுவரை எவரும் கொண்டுசெல்லவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
