வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு!

Missing Persons Sri Lanka United Kingdom International Court of Justice
By Kalaimathy Aug 31, 2022 07:51 AM GMT
Report

வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தொடர்போராட்டம் 2000 நாட்களை கடந்துள்ளது.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கையெழுத்திடப்பட்ட மனு ஒன்று பிரித்தானிய பிரதமர் அலுவகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, நேற்று செவ்வாய்க்கிழமை, லண்டன் ரவர்கார் சதுக்கத்தில் (Trafalgar Square) மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தன.

இந்த போராட்டத்தின் போதே பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் மனு கையளிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச நாளை நினைவு கூரும் வகையிலும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வாழ் உறவுகள் இணைந்து கையளித்த மனு

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு! | Sri Lanka Missing Persons United Kingdom Protest

மேலும் தாயகத்தில் பலவிதமான அச்சுறுத்தல்கள் துன்பங்களுக்கு மத்தியிலும் தளராது துணிந்து நின்று, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக நீதி வேண்டி, தொடர்ந்து போராடிவரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை பிரிந்தானியாவுக்கு அழைத்து, அவர்களே நேரில் இந்த மனுவை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

எனினும், அவர்கள் பயணத்தில் ஏற்பட்ட தடங்கலால், அவர்கள் சார்பில் இந்த மனுவை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரித்தானிய வாழ் உறவுகள் இணைந்து சமர்ப்பித்துள்ளனர்.

லண்டனை தளமாக கொண்டு இயங்கும், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) இதனை வழிநடத்தியிருந்தது.

தொடர் போராட்டத்தின் போதும் கிடைக்காத நீதி 

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மனு! | Sri Lanka Missing Persons United Kingdom Protest

2009 ஆம் ஆண்டு இறுதியுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம்  கையளித்து காணாமலாக்கப்பட்ட மற்றும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு மற்றும் பல்வேறு வகைகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி 2000 நாட்களைக் கடந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர்ச்சியாக பலவேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

இருந்தபோதிலும் இதுவரை அவர்களிற்கு உரிய நீதி கிடைக்கவில்லை.   இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட இம்மனுவில், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தி உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென கோரப்பட்டுள்ளது.

மேலும் தம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான சிங்கள் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களிற்குரிய நிலங்களிலிருந்து உடனடியாக அகற்றப்படவேண்டுமெனவும், தமிழ் அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் உறவுகள் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், தமிழ் மக்களிற்குரிய சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அந்த மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024