புலம்பெயர்ந்தவர்களின் படகுடன் மோதிய கிரேக்க கடற்படை கப்பல் : பலர் பலி
கிழக்கு ஏஜியன் கடலில் உள்ள சியோஸ் தீவில் நேற்று(03) செவ்வாய்க்கிழமை புலம்பெயர்ந்தோர் படகும் கிரேக்க கடலோர காவல்படை கப்பல் மோதியதில் குறைந்தது 15 புலம்பெயர்ந்வர்கள் உயிரிழந்துள்ளதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவர் என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. காயமடைந்த பெண்களில் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.
11 குழந்தைகள் உட்பட இருபத்தைந்து புலம்பெயர்ந்தோர் மீட்பு
விபத்திற்குப் பிறகு 11 குழந்தைகள் உட்பட இருபத்தைந்து புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டனர். இரண்டு கடலோர காவல்படை அதிகாரிகளும் காயமடைந்தனர்.

image credit - reuters
ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள கிரீஸ், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து குடியேறுபவர்கள் மற்றும் அகதிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான ஒரு விருப்பமான நுழைவாயிலாக நீண்ட காலமாக இருந்து வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |