சீருடையினரின் அடக்குமுறைக்குள் தமிழரின் கரிநாள்: வார்த்தை ஜாலம் காட்டிய அநுர
இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்ட காலத்துக்குப்பின்னரான சில தசாப்பதங்களாக கொழும்பில் பெப்ரவரி நான்காம் திகதியும் களிப்பும் மற்றும் வடக்கு கிழக்குக்கு அது கரிநாள் என்ற நியதியும் இருந்தது.
இன்றைய பெப்ரவரி நான்காம் திகதியிலும் அது உறுதிப்படுத்தப்பட்டது.
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை மையப்படுத்தி தமிழர் தாயகத்தில் வழமை போலவே இன்று (04-02-2026) கரிநாள் போராட்டங்கள் இடம்பெற்ற போது அதே வழமையில் சீருடையினரின் கெடுபிடிகளும் ஆங்காங்கே இடம்பெற்றன.
கிழக்கில் இடம்பெற்ற கெடுபிடிகளில் போராட சென்றவர்களின் வாகனங்களுக்குள் சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பே கஞ்சா பொதிகளை வைத்து அவற்றின் சாக்கில் அறவழியாளர்களின் பயணத்தை தடுப்பமுயன்ற மூன்றாம் தர செய்கைகளும் வெளிப்பட்டன.
தமிழர்களின் அரசியல் பரப்பின் சமகால கையறுநிலைகள், குழுமிப்பிடிகள் மற்றும் நவக்கிரபாணி முகந்திருப்பும் நகர்வுகள் தொடரும் நிலையில், இன்று காலை கொழும்பில் நடந்த சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவின் அரசதலைவர் அநுர, தமிழர்களுக்கு அந்த தீவில் ஒரு நீண்டகால அரசியல் வேணவா உள்ள விடயத்தில் மூச்சுக்கூட விடவில்லை.
மாறாக தனக்கே உரிய வார்த்தை ஜால நிலையுடன் பழைய கதைகளை புதியதாக சொல்லத்தலைப்பட்டார்.
அநுரவின் இந்தக்காட்சிப்படுத்தல் மற்றும் சமகாலத்தில் தமிழர் தாயகத்தில் வெளிப்பட்ட போராட்டங்களில் ஒன்றான இருந்த கிளிநொச்சிப் போராட்டம், சிறிலங்கா நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியில் சுமந்திரன் தரப்பால் தான் நீக்கப்பட்டதான செய்திகளுக்கு பதிலடியான ஒரு திரள்நிலையை அவர் மறைமுக செய்தியை வழங்கிய நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 17 மணி நேரம் முன்