கடற்கரைக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் மாயம்!
Sri Lanka Police
Missing Persons
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kalaimathy
அம்பலாந்தோட்டை – வெலிபட்டன்வில பகுதியில் கடல் அலையில் சிக்கி மூவர் மாயமாகியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மாயமானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மேலுமொரு இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் வெலிபட்டனவில பகுதியிலுள்ள விகாரையொன்றுக்கு சென்று பின்னர், கடற்கரைக்கு சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கி 55 வயதான பெண், 16 வயதான அவரது மகன் மற்றும் 22 வயதான இளைஞரொருவருமே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல்போயுள்ளவர்களை தேடும்பணிகளை காவல்துறைியனர் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

