அதிநவீன இயந்திரத்துடன் முல்லைத்தீவில் கைதான தென்னிலங்கையர்கள்!
முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து அதிநவீன ஸ்கானர் இயந்திரத்துடன் தென்பகுதியினை சேர்ந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள னர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேக நபர்கள், கடந்த திங்கட்கிழமை அதிகாலை கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சென்றுள்ளனர். அதனையடுத்து மறுநாள் இரவு முல்லைத்தீவு நோக்கி பயணித்த போது முல்லைத்தீவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பேருந்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இயந்திரத்துடன் சந்தேக நபர்கள் கைது
இவர்களிடம் இருந்து அதிநவீன ஸ்கானர் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஸ்கானர் மாணிக்கக்கல், தங்கம் என்பனவற்றை அடையாளம் காட்டும் என புலன் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் எங்கு சென்றார்கள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பான வாக்கு மூலங்களை முல்லைத்தீவு காவல்துறையினர் பெற்றுவருவதுடன் இவர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் ராகமை மற்றும் அவிசாவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
