மாந்திரீகர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - தென்னிலங்கையில் கொடூரம்
தென்னிலங்கையில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்குரஸ்ஸ, திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று காலையிலேயே தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 70 வயதான மாந்திரீகர் ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த நபர், தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வள கங்கையில் வீசியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டுக்கு அண்மையில் வசித்துவருபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவிகத்துள்ளனர்.
இந்த கொலை, காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்காக பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்தனர்.
