செங்கடலிற்கு எந்த நேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ள சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி அனுமதி வழங்கியதும் கடற்பாதைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக செங்கடலிற்கு கப்பலை அனுப்ப கடற்படை தயார் என கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசிங்க தெரிவித்தார்.
செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனினும் நாங்கள் தயாராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு
பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் திகதி தீர்மானிக்கப்பட்டதும் நாங்கள் கப்பலை அனுப்புவோம் எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் கடற்படை தளபதி உட்பட்டவர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 3ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க, கப்பல் பாதைகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கடற்படைக் கப்பலை செங்கடலுக்கு அனுப்புவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |