ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு - வெளியான விசேட வர்த்தமானி
புதிய இணைப்பு
15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கிணங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விசேட வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) இதனை அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ( National People's Power) வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி, நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (21) அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்கிறார்.
ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்தைப் பெறாததால் தேர்தல் ஆணைக்குழு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ண வேண்டியிருந்தது.
அனுர திஸாநாயக்க – 5,740,179 - 55.89%
சஜித் பிரேமதாச – 4,530,902 – 44.11%
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |