சிறிலங்காவின் புதிய அதிபரானார் ரணில்! தேர்தல் முடிவு தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்
எங்கள் கட்சியின் சார்பில் டளஸை நிறுத்தினோம், வாக்களித்தோம் ஆனால் அவர் தோல்வியடைந்து விட்டார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய அதிபர் தெரிவுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடிவடைந்து வெளியேறும் போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பதிலளித்த மகிந்த
கேள்வி - ரணில் விக்ரமசிங்க அதிபராக தெரிவானது குறித்து உங்களது கருத்து?
பதில் - அதிகளவான வாக்குகள் கிடைத்தது அதனால் அவர் அதிபராக தெரிவாகியுள்ளார்.
கேள்வி - உங்களது நீண்டகால அரசியல் எதிராளியான ரணிலுக்கு நீங்களும் வாக்களித்திருக்கலாம்?
பதில் - இல்லை, அப்படி அல்ல.
கேள்வி - எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பது எப்படி நடக்கும்?
பதில் - நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். எந்த அரசாங்கமாக இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். நாங்கள் கட்சியின் சார்பில் டளஸை நிறுத்தினோம். வாக்களித்தோம். தோல்வியடைந்தார். யாராவது வெற்றி பெற வேண்டுமே, என மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

