வவுனியாவில் பதற்றம்! மாநகரசபை நடவடிக்கைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் குதித்த வியாபாரிகள்
நடைபாதைகளில் கடைகள் என்பது வவுனியா நகரில் நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சனையாகும்.
குறிப்பாக வவுனியா மாநகரசபைக்குட்பட்ட இலுப்பையடிச்சந்தி, வைத்தியசாலை வளாகம் மற்றும் பொது சந்தையை அண்மித்த பகுதிகளில் இந்த பிரச்சினை நிலவுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான கடைகளை அகற்றி புதிய இடத்தில் அமைக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆட்சிக்கு வந்துள்ள தமிழரசு கட்சி
இந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தமிழரசு கட்சியின் கூட்டு மாநகர அரசு சார்பில் இன்று இக்கடைகளை பலவந்தமாக அகற்ற முற்பட்டபோது அங்கிருந்த வியாபாரிகளுக்கும் அகற்ற முற்பட்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் கடைகளை பலவந்தமாக அகற்ற வேண்டாம் தமக்கு உரிய இடத்தில் தமக்கு ஏற்பாற்போல கடைகளை அமைக்க சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளால் ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் மாற்றிடம் வழங்குப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இடமானது வியாபாரஸ்தலத்துக்கு ஏற்புடையதாக இல்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த விடயம் கலவரமாக மாறியதால், பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு படையினரும் இவ்விடத்தில் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வவுனியா மாநகரசபையால் இன்று யாழ் வீதியில் வீதியோரங்களில் உள்ள தமிழர்களின் சில கடைகளை போக்குவரத்துக் இடையூறாக இருப்பதாக தெரிவித்து அகற்றப்பட்டிருந்தது.
வீதியோரக் கடைகள்
இவ்வாறு அகற்றப்பட்ட வீதியோரக் கடைகளில் இருந்த பழங்கள், மரக்கறிகள் உழவியந்திரத்தில் ஏற்றி மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குறித்த பொருட்கள் மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு சென்றதன் பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அப்பழங்களை பைகளில் இட்டு தாம் கொண்டு செல்வதற்கு தயாராக இருந்ததோடு சிலர் பழங்களை உண்டு மகிழ்ந்ததையும் அவதானிக்க கூடியதாக காணப்பட்டதாக சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.
வீதியோரத்தில் வாழ்வாதாரத்துக்காக தொழில் செய்தவர்களின் பொருட்களை உழவியந்திரத்தில் ஏற்றி சென்ற மாநகரசபை ஊழியர்கள் குறித்த பொருட்களை தாம் எடுத்துச் செல்ல முற்பட்டதும் உண்டு களித்ததும் பெரும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை பொருட்களை இழந்த சாதாரண வியாபாரிகள் துன்பத்தில் இருக்கும் போது அவர்களின் பொருட்களை எடுத்துச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவும் காணப்படுவதாகவும் பைகளில் இடப்பட்ட பழங்கள், மரக்கறிகளை அங்குள்ள வேறுயாரும் கொண்டு செல்வதற்காக ஊழியர்களை பயன்படுத்தினரா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

