இலங்கையின் அடுத்த அரச தலைவர், பிரதமர் விவகாரம் - பலரின் பெயர்கள் பரிந்துரை
அரச தலைவர் மற்றும் பிரதமர் பதவி
நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை தொடர்ந்து அரச தலைவர் மற்றும் பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அரசியல் அமைப்பு சட்டத்திற்கமைய புதிய அரச தலைவர் மற்றும் பிரதமர் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் அரச தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் முதலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயரும் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானவர்கள் பொன்சேகாவுக்கு தலைமைத்துவத்தை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரச தலைவர் அல்லது பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் அரச தலைவராக நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், இந்த பதவிகளுக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்வந்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸை அரச தலைவர் பதவிக்கு நியமிப்பதற்கு மூன்று முன்னாள் ஆளுநர்கள் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
