வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம் - வடக்கு, கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Vanan
Courtesy: நாகமுத்து பிரதீபராஜா
நாளை (27) முதல் 01.03.2023 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவிலான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
கன மழை
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இத் தாழமுக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் இற்றைப்படுத்தப்படும் என அவர் தனது முகநூல் ஊடாக பதிவிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி