சிறிலங்காவிற்குள் நுழைந்த யுத்தக் கப்பல் - கூட்டுப் பயிற்சிக்குத் திட்டம்!
பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான 'பிஎன்எஸ் தைமூர்' கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
குறித்த போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், கடற்படை மரபுக்கமைய வரவேற்பளிக்கப்பட்டதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் கப்பல், சிறிலங்கா கடற்பரப்பில் நங்கூரமிட்டிருக்கும் போது பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ள பகிஸ்தான்
அத்துடன் 15 ஆம் திகதி கப்பல் நாட்டைவிட்டு வெளியேறும் போது சிறிலங்கா கடற்படையுடன் மேற்கு கடலில் கூட்டு பயிற்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சீனாவின் யுவான் வாங் 5 (YUAN_WANG) கப்பலின் வருகை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், பிஎன்எஸ் தைமூர் கப்பலும் சர்வதே ஊடகங்களில் இடம்பிடித்துள்ளது.
கட்டளை அதிகாரி M Yasir Tahir TI இன் கீழ் வழிநடத்தப்படும் பாகிஸ்தான் கப்பலின் நீளம் 134 தொடக்கம் 169 மீற்றர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






