சற்று முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பசிலின் இராஜினாமா கடிதம்!
சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்றைய தினம் தனது பதவி விலகல் கடித்ததை கையளித்திருந்தார்.
இந்நிலையில், பசில் ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பதவி விலகல் கடிதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
அதேவேளை நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க இந்த கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் எனவும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் பதவி விலகல் கடிதத்தை கையளித்ததோடு, இனிவரும் காலங்களில் அரசாங்கத்தில் எந்தவிதமான பொறுப்புக்களையும் வகிக்கப் போவதில்லை என்றும் நேற்றைய தினம் ஊடகங்களிடம் பசில் அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றாரா தம்மிக்க?
இதேவேளை, பசில் ராஜபக்சவின் பதவி விலகலால் ஏற்படும் வெற்றிடத்திற்கு இலங்கையின் முன்னணி தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஏற்கனவே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்