மீண்டும் பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! பதவி துறக்கத் தயாரானார் பசில்- சற்று முன்னர் வெளியான தகவல்
இரண்டாம் இணைப்பு
சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பசில் ராஜபக்ச நாளை விசேட அறிக்கையொன்றைய வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகி்னறது.
ஆகவே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணத்தில் இருப்பதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
பசில் ராஜபக்ஷ தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார் என பொதுஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொதுஜன பெரமுன மறுப்பு
ரணில் மற்றும் பசிலுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து பசில் ராஜபக்ச பதவிவிலகவுள்ளார் எனவும் செய்தி வெளியாகியிருந்தது.
அதேவேளை அந்த வெற்றிடத்துக்கு பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
தொலைக்காட்சி நேர்காணல்
அதை ஆமோதிக்கும் வகையில் அண்மையில் தொழிலதிபர் தம்மிக பெரேராவும் தனக்கு ஒரு அமைச்சுப் பதவி வழங்கினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வழியை அறிந்து வைத்திருப்பதாகவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்தார்
இந்நிலையிலேயே பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்ய மாட்டார் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பசில் ராஜபக்சவிற்கும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

