பலப்படுத்தப்பட்டது சபாநாயகரின் பாதுகாப்பு!
Sri Lanka Army
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விசேட அதிரடிப்படடையினருக்கு மேலதிகமாக மேலும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி சபாநாயகரின் வீடு மற்றும் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றுக்கு மேலதிக சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக காவல்துறையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
