இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பம் - கட்சித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு!
அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய, இன்று மாலை 5 மணிக்கு சபாநாயகர் இல்லத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை முதல் பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
போராட்டக்காரர்களை விரட்டியடிக்க காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் என்பன மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் அத்தனையும் மீறி போராட்டக்காரர்கள் தற்போது பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 30 பேர் படுகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாள் முழுவதும் நாடு கொந்தளிப்பான நிலையில் இருக்கும் அசாதாரண சூழலில் சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
