ரணிலை அதிபராக்குவதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் வாக்கு சீட்டுகள் அழிப்பு!
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Ranil Wickremesinghe
Sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றில் கடந்த ஆண்டு ரணில் விக்ரமசிங்க அதிபராகத் தெரிவு செய்யப்படுவதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் ஒப்புதலுடன், நாடாளுமன்ற பொதுச் செயலாளரால் வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வாக்கு சீட்டுக்கள் அழிப்பு
ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு 134 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதன்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்ற அதேவேளை அனுரகுமார திஸாநாயக்க 03 வாக்குகளை பெற்றிருந்தார்.
மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 223 பேர் வாக்களித்தனர். அதில் 4 பேரின் வாக்குகள் செல்லுபடியற்றவை என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்