மக்கள் போராட்டங்களை முடக்கும் கோட்டாபயவின் சதித் திட்டம் - மீண்டும் அவசரகால சட்டம்!
சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் அவசரகால சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி விகும் லியனகே ஆகியோர் கூடி இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி நாளை மற்றும் நாளைமறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மக்கள் போராட்டத்தை முடக்கும் சதி
இருப்பினும் குறித்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், 9ஆம் திகதிக்கு முன்னர் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த மாதங்களிலும் ராஜபக்சக்களை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராட்டங்கள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டாபதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்