கடற்றொழிலாளர்களுக்கு வருகிறது 56 மில்லியன் டொலர் இழப்பீடு
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு 2980.5 மில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (05) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
56.90 மில்லியன் டொலர்கள்
கடற்றொழில் சமூகத்திற்கான முதல் கட்ட இழப்பீட்டின் கீழ் 56.90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கோரப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களம் கப்பலின் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து 2.28 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீண்டும் கோரியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இழப்பீடு
இந்த நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விதிக்கப்பட்ட மீன்பிடித் தடை பல தரப்பினரை பல்வேறு வழிகளில் பாதித்துள்ளதாகவும், இந்த தரப்பினர் மீன்பிடித் தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள 23 பிரிவுகளாகவும், மறைமுகமாக 23 பிரிவுகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீர்கொழும்பு களப்பில் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் நீர்வாழ் உயிரின விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேதம் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |