மத்தியக்கிழக்கு போரின் எதிரொலி...! எகிறபோகும் இலங்கையின் எரிபொருள் விலை
வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகாலத் திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது.
இந்தநிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
செலவு குறைவு
இதையடுத்து, ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடமிருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இங்கு இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அத்தோடு, சிங்கப்பூர் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் திறந்தே உள்ளது.
இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |