உண்டியல் முறை மூலம் வெளிநாட்டுப் பணங்களை பரிமாற்றிய இளைஞன் கைது!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Police
Crime
Dollars
By pavan
உண்டியல் முறை மூலம் வெளிநாட்டுப் பணங்களை பரிமாற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம, கல்பொக்க பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதாகியுள்ளார்.
கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு சட்டவிரோதமான உண்டியல் முறையின் கீழ் வெளிநாட்டுப் பணத்தை மாற்றியமைக்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பல வெளிநாட்டு நாணயங்கள்

குறித்த நபரிடம் இருந்து அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் மற்றும் திர்ஹாம் போன்ற ஒரு கோடியே 67 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 50 நிமிடங்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி