நாளை நாடாளுமன்றத்துக்கு வரும் 22 ஆவது சீர்திருத்தம்!
22 ஆவது சீர்திருத்தம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாளை 27 ஆம் திகதி புதன் கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
21ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்பட்டு 19ஆவது திருத்தம் ஒன்றிணைக்கப்பட்டு 22ஆவது அரசியலமைப்பு திருத்தமாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 22ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான முதலாம் வாசிப்பு (உச்ச நீதிமன்றத்தின் மூலம் சவாலுக்கு உட்படாதிருந்தால்) ஒரு வாரத்துக்குப் பின் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அங்கீகாரம்
22ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதையடுத்து கடந்த ஜூன் 24 ஆம் திகதி அதுதொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் நிர்வாக நடவடிக்கைகளில் சம்பந்தப்படுவதற்கு காணப்பட்ட வாய்ப்பு இந்த திருத்தத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை, வேறொரு நாட்டின் பிரஜையான இலங்கையர் மக்கள் வாக்களிப்பின் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவது இடம்பெறாத வகையில் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பணிப்புரை
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவொருவர் அவருக்கு அமைச்சரவை அந்தஸ்து அல்லது அந்தஸ்த்தற்ற மற்றும் பிரதி அமைச்சராக வருவது அதன்மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆளும்கட்சியின் பிரதம அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில், 22ஆவது திருத்தம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க
அதிபர் ரணில் விக்ரமசிங்க
பணிப்புரை விடுத்துள்ளதாகவும்
அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில்
உள்ளடக்குவதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
