இலங்கை எதிர்கொள்ளப்போகும் ராஜதந்திரத் தடைகள்..! எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை
ராஜதந்திரத் தடைகள்
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை ராஜதந்திரத் தடைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை தேசிய சீர்திருத்த செயலகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசியல் பங்காளிகள் மத்தியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் முக்கிய நகரங்களில் இலங்கை மீது தூதரகத் தடைகளை விதிக்கவும் வேறு வகையான பொருளாதாரத் தடைகளை நடைமுறைபடுத்த விவாதங்கள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,