அமைச்சரவையில் முட்டாள்கள்! மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறும் முக்கிய புள்ளி
அமைச்சரவையில் சில முட்டாள்கள் இருக்கின்றனர். அவர்கள் மக்கள் ஆணை பெறாதவர்கள். அப்படியானவர்கள் தன்னிச்சையாக செயற்படுகின்றனர் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து எனக்குத் தெரியாது. எனினும், வெறுமனே அரசில் அமர நான் தயாரில்லை. அதிபருடன் அல்லது அவரின் பெரும்பான்மை அரசுடனோ எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், அமைச்சரவையில் தற்போது சில முட்டாள்களே இருக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியைக் கட்டியெழுப்பவும், தேர்தல் வெற்றியைப் பெற்றுக்கொடுக்கவும் அயராது உழைத்தேன். வடக்கு, கிழக்கில் எனது மாவட்டத்தில் மட்டும்தான் மொட்டு கட்சிக்கு சிறந்த வெற்றி கிடைத்தது என்றார்.
இது பற்றிய மேலதிக செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
