உயர்மட்ட தலைவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமை தொடர்பில் உண்மையை வெளிப்படுத்திய பெரமுன!
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Kalaimathy
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக உயர்மட்ட அரசியல்வாதிகள் தப்பியோட முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் உயர் மட்ட தலைவர்கள் எவரும் நாட்டில் இருந்து வெளியேறவில்லை என அந்த கட்சி அறிவித்துள்ளது.
தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடும் மகிந்த, பசில்
பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உட்பட உயர் மட்ட தலைவர்கள் அனைவரும் நாட்டில் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
