ராஜபக்ச குடும்பம் கொள்ளையிட்ட பணத்தை கைப்பற்ற வேண்டும்..! சபையில் கோரிக்கை
மக்கள் மீது வரி சுமையை சுமத்தாது, ராஜபக்ச குடும்பத்தினர் சுமார் ஒரு தசாப்த காலத்தில், பல்வேறு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், கொடுக்கல் வாங்கல்கள் மூலம் கொள்ளையிட்ட நாட்டின் செல்வத்தை மீண்டும் கைப்பற்றி, அதன் மூலம் அரச வருமானத்தை அதிகரிப்பதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இருக்கும் ஒரே தீர்வு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.
டொலர்களை மீண்டும் நாட்டிற்கு
திருடர்களை பிடிப்பதன் மூலம் அவர்கள் கொள்ளையிட்ட டொலர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வந்து நாட்டின் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி என்ற வகையில் அரசியல் பழிவாங்கல்களையோ அல்லது தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்களையோ ஏற்றுக்கொள்வதில்லை.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
