ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...!

SLPP Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe
By Aadhithya Aug 29, 2024 12:59 PM GMT
Report
Courtesy: Gunadharshan

தற்போதைய இலங்கையின் (Sri Lanka) ஜனாதிபதி அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்பட்டாலும், பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற கருத்தாடல்கள் காணப்படுகின்றன.

சரியான ஆணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என தேர்தல் மேடைகளில் எதிர்க்கட்சியினர் பரவலாக சாடி வருகின்றனர்.

ரணிலின் ஆட்சியை அடிப்படையாக கொண்ட உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கையில் ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் உணவுப் பற்றாக்குறையுடன் உள்ளனர் என கூறப்படுகிறது.

இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா...வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக போராடும் மக்கள் விசனம்

இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா...வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக போராடும் மக்கள் விசனம்

வறுமை வளர்ச்சி

அதே நேரம் வறுமை வளர்ச்சியானது 2026இல் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி பணியாளர்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிகளை விதித்து பலதரப்பு, இருதரப்பு மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை பேச்சுவார்த்தைமூலம் நகர்த்தி வருகின்றனர்.

ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...! | Sri Lanka Politics Ranil S Leadership Criticized

இது மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இன்று ரணிலின் பங்காளிகள் அவரை ஒரு சிறந்த தலைவர் என கூறி, தற்போது நடைபெற்று வரும் பொருளாதார சவால்களின் மூலம் இலங்கையை தொடர்ந்து வழிநடத்த அவரால் மட்டுமே முடியும் என்று கூறுகின்றனர்.

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: 12 வருடங்களுக்கு பிறகு அடையாளங்காணப்பட்ட குற்றவாளிகள்

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: 12 வருடங்களுக்கு பிறகு அடையாளங்காணப்பட்ட குற்றவாளிகள்

பொருளாதார மோசடி

இதன் அடிப்படையில் ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஓரளவேனும் தற்போது நாடாளுமன்றத்தில் ரணிலை ஆதரிக்கிறது. இந்த ஆதரவென்பது ராஜபக்ச குடும்பத்தில் உள்ளவர்களை பொருளாதார மோசடியில் பொறுப்புக்கூற வைக்காததற்கு ஈடான ஆதரவு நிலைப்பாடு என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...! | Sri Lanka Politics Ranil S Leadership Criticized

நடைபெறவுள்ள தேர்தலில் ராஜபக்சர்களும் ரணிலை ஆதரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, இதன் காரணமாகவே நாமல் களத்தில் இறங்குவதற்கு முன்பே கட்சிக்குள் இருந்த பல அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவை அறிவித்தனர். இதை விரும்பாத ராஜபக்சர்கள் தலைமை ஆசனத்தை தந்தையிடம் இருந்து மகனுக்கு வழங்கியுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றிலிருந்து மாயமான ஆபத்தான பொருள்

கொழும்பு நீதவான் நீதிமன்றிலிருந்து மாயமான ஆபத்தான பொருள்

கட்சி கூட்டம்

இவ்வாறான ஒரு பின்னணியிலேயே நேற்று (28) இடம்பெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றினால் உறவினர்களுக்கே பதவிகள் பகிரப்படும் என சாடியுள்ளார்.

ரணிலை மீட்பராக சித்தரிக்கும் ஆளும் தரப்பும், மறுக்கும் எதிரணிகளும்...! | Sri Lanka Politics Ranil S Leadership Criticized

குறித்த மேடையில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “மகிந்த அரசாங்கத்தை ஸ்தாபித்தால், தம்பியை ஜனாதிபதியாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார். அடுத்த தம்பி பசிலுக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார். அண்ணனை அமைச்சராக்குகிறார். சமல் ராஜபக்சவின் புதல்வருக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வாறு உறவினர்கள் இல்லை. அதன் காரணமாக அவர், கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஆலோசகர் பதவிகளை வழங்கியுள்ளார். அகில விராஜ் காரியவசம் (Akhila Viraj Kariyawasam), ஆஷூ மாரசிங்க, ருவன் விஜேவர்த்தன, ஹரீன் பெர்னாண்டோ (Harin Fernando), மனுச நாணயக்கார (Manusha Nanayakara) ஆகியோருக்கு இந்த ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் என்ன? ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் தங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே.” என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி